சசிகுமார் இயக்கிய நாடோடிகள் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மாற்றுத்திறனாளி நடிகை அபிநயா, அதன்பின்னர் ஈசன், ஏழாம் அறிவு, வீரம் போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது ஒரு தமிழ் படத்தில் ஓட்டல் ரிசப்னிஸ்ட்டாக அபிநயா நடித்து வருகிறார்.

இயக்குனர் ரிதுன் சாகர் என்பவர் இயக்கி வரும் ‘துடி’ என்ற படத்தில் ரிசப்னிஸ்டாக நடித்து வரும் அபிநயாவுடன் சுமன், பிரம்மானந்தம், சூது கவ்வும் ரமேஷ், நளினி, மற்றும் பிரேர்னா ஆகியோர்களுடன் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மைன்டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், ஜி.லஷ்மி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு நடாஷா ஆதித்யா இசையமைக்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை தாஜ் ஓட்டலில் நடந்த அட்டாக் போல ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் நடக்கும் தீவிரவாதிகளின் தாக்குதல்தான் இந்த படத்தின் கதை. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும் இந்த தாக்குதல் எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதை விறுவிறுப்புடன் இயக்கியுள்ளார் இயக்குனர் ரிதுன் சாகர். இப்படத்திற்காக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் 5 ஸ்டார் ஓட்டல் போன்ற செட் போடப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

English Summary: Abinaya acts as 5 star Hotel Receptionist.