கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவராக விளங்கி வரும் போப்பாண்டவர் பிரான்சிஸ் முதல் முறையாக பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிகானில் இருக்கும் போப்பாண்டவர் கடந்த சில மாதங்களாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து ஆசி வழங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்முறையாக இந்த ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வாடிகானில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத விவகாரங்களுக்கான அமைச்சர் சர்தார் யூசுஃப் கடந்த மாதம் வாடிகன் சென்றிருந்தபோது, பாகிஸ்தானுக்கு வருமாறு போப் பிரான்சிஸுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விடுத்த அழைப்பைத் தெரிவித்தார்.
அவரது அழைப்பை ஏற்றுக் கொண்ட போப், இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தான் வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
வாடிகன் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளின் தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, அவர் பாகிஸ்தான் வருவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானின் மத நிந்தனைச் சட்டத்துக்கு எதிராகப் பேசியதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்தவரான அமைச்சர் ஷாபாஸ் பட்டிக்கு, புனிதர் பட்டம் கொடுக்க வேண்டும் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. போப் வருகையின் போது இந்த புனிதர் பட்டம் அவருக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
English Summary : For the first time, the pope decided to go to Pakistan.