தமிழகம், புதுச்சேரி உள்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து மாநிலங்களிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் வாக்காளர்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் நோட்டாவுக்க் வாக்களிக்கலாம் என்றும் நோட்டாவுக்கென தனி சின்னம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்

புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒட்டுமொத்தமாக 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மொத்தம் 17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மேற்கு வங்கம் 294 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கும், தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையை பொறுத்து வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அசாமில், சுமார் 25,000 வாக்குச்சாவடிகளும், கேரளாவில் 21,000 வாக்குச்சாவடிகளும், தமிழ்நாட்டில் 65,000 வாக்குச்சாவடிகளும், மேற்குவங்கத்தில் 77,000 வாக்குச்சாவடிகளும், புதுச்சேரியில் 913 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளன.

நோட்டாவுக்கென தனி சின்னம் அமைக்கப்படும். எந்த கட்சி வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்களர்களுக்கும் நோட்டா சின்னத்தில் வாக்களிக்கலாம்.

இவ்வாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.

English Summary : Najim Zaidi announced a separate symbol for NOTA vote for this election.