சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்ததோடு முக்கிய ஆவணங்களான ரேசன் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை ஆகியவற்றையும் வெள்ளத்தில் பறிகொடுத்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாஸ்போர்ட்டுக்களை இழந்த பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், அவர்களுக்கு புதிய பாஸ்போர்ட்டுக்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
இன்று காலை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உங்கள் பாஸ்போர்ட் காணாமல் போயிருந்தாலோ அல்லது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ சென்னையில் உள்ள 3 பாஸ்போர்ட் சேவா மையங்களில் ஏதேனும் ஒன்றை அணுகி மாற்று பாஸ்போர்ட்டை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கான உரிய ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.
மேலும், வெளியுறவு இணை அமைச்சர் வி,கே,சிங்கிடம் பாஸ்போர்ட் தொடர்பான பிரச்சினைகளை கவனித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளேன்”
அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
Sushma Swaraj @SushmaSwaraj
If your passport is lost or damaged in floods, pl go to any of three PSKs in Chennai. They will issue u fresh passport free of charge.
English summary-if u lost passport in flood,fresh passport free of charge.