தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்-பதிப்பாளர்கள் சங்கத்தின் (“பபாசி’) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழா, சென்னை கடற்கரை சாலையில் உள்ள தீவுத் திடலில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ‘பபாசி’ என்று கூறப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்-பதிப்பாளர்கள் சங்கத்தின் புத்தக திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான புத்தக திருவிழா வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழா சென்னை கடற்கரை சாலையில் உள்ள தீவுத் திடலில் நடைபெறவுள்ளது.
சென்னை தீவுத்திடலில் உள்ள மிகப் பெரிய மைதானத்தில், 800-க்கும் அதிகமான அரங்குகளும், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. உணவுத் திருவிழா, பல்வேறு அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் உள்பட ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் தொடங்கி ஜனவரியில் பொங்கல் பண்டிகை வரை புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த டிசம்பரில் சென்னையில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக புத்தக காட்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி மழை, வெள்ளத்தில் காட்சிக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான புத்தகங்கள் மழை நீரில் நனைந்ததால், ரூ.25 கோடி வரை பதிப்பகத்தினருக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பார்வையாளர்கள் எளிதில் வந்து செல்லும் நிலையில் இருப்பதால் தீவுத்திடலில் புத்தகத் திருவிழா நடத்தப்பட உள்ளதாக பபாசி நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த புத்தக திருவிழாவுக்கான ஸ்டால்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary: From June 1 to 13, the Book Festival in Chennai Island Ground.