பாரத பிரதமர் நரேந்திரமோடியின் கனவுகளில் ஒன்று இந்தியாவின் முக்கிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற வேண்டும் என்பதுதான். இந்நிலையில் சமீபத்தில் 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திலும் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் நகரங்கள் குறித்த பட்டியல் வெளியானது. அந்த பட்டியலில் இடம்பெற்ற நகரங்களில் ஒன்று கோவை ஆகும்.
இந்நிலையில் கோவையை ஸ்மார்ட் சிட்டியாக வடிவமைக்க ஜெர்மனி நாட்டிடம் பொறுப்புகள் ஒப்படைக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுற்றுச் சூழல் மற்றும் கட்டுமானத் துறை அமைச்சர் குந்தர் அட்லர் கூறியபோது கோவையை தங்கள் நாடு ஸ்மார்ட் சிட்டியாக வடிவமைக்க உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் கோவை மட்டுமின்றி கேரள மாநிலத்தின் கொச்சி நகரம், ஒடிஷாவின் புவனேஸ்வரம், ஆகிய நகரங்களையும் ஸ்மார்ட் சிட்டிகளாக உருவாக்கும் திட்டத்தை ஜெர்மனி செயல்படுத்த உள்ளதாகவும் இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary: Germany converts a smart city to Coimbatore.