சென்னை வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.திலகர் அளித்த பேட்டி ஒன்றில், ‘இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 359 மாணவ மாணவிகளுக்கு பட்டம் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் இவர்களில் 109 பேர் அஞ்சல் வழியில் பட்டம் பெறவுள்ளதாகவும் கூறினார்.

மேலும் 98 விருதுகளும் பதக்கங்களும் சிறப்பிடம் பெற்ற 34 மாணவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும், குறிப்பாக ஜிதேந்திர குமார் யாதவ் என்ற ஒரே மாணவருக்கு 18 விருதுகள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மாணவர் பி.வி.எஸ்.சி பட்டப்படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2015-16 கல்வியாண்டில் மேலும் 3 புதிய விருதுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும், இந்த விருதுகள் மாணவர்களின் தேர்ச்சி திறனை அதிகரிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

English Summary : Tamil Nadu University for Veterinary and Animal Sciences in Vepery, Chennai conducted their 17th convocation ceremony today.