மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இன்று உத்தரவிட்டுள்ளது.
5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு தற்போது 8.3 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது, இது 8.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் இந்த வட்டி வழங்கப்படும். தொழிலாளர் சேமநல நிதி (பிபிஎஃப்) மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டி விகிதம் என்பது தற்போதுள்ள 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்திர வட்டி 7.3 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. பெண்குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி, அதாவது செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.1 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.