ஆரோக்கியம் என்பது உடல் சுகம், பிராண இயக்கம், மன நிறைவு, புத்தி தெளிவு, ஆத்ம ஆனந்தம் இவற்றை ஒன்று சேர அனுபவிக்கும் நிலையை யோகாவின் வாயிலாக வரவேற்கிறோம்.
விழிப்புணர்வு வகுப்பு
உடல், மன ஆரோக்கியத்திற்கு யோக முறைகள், தத்துவ விளக்கம், உணவு முறைகள் மற்றும் சுயநல குணங்கள் விளங்கப்பட்டு சுயரூப குணங்கள் மேன்பட்டு தன்னையறிந்து சுதந்திரமான ஆத்ம சொரூப அனுபவம் பெற வழிமுறைகள்.
ஆரோக்கியமின்மைக்கு அடிப்படை காரண காரியங்கள்
> அன்றாட வாழ்வில் முறையற்ற உணவு, உழைப்பு, உறக்கம்.
> சுற்றுச்சூழலால் ஏற்படுத்தும் பாதிப்புகள்.
> பரம்பரையாக தொடரும் வியாதிகள்.
> 40 வயதுக்குமேல் தொடரும் உடல் பலஹீனம் (முதுமை)
> மன அழுத்தத்தினால் வரும் உடல்நல கோளாறுகள்.
> ஊழ்வினை ( கரும ) பலனாக வரும் சூழல், குற்றங்கள், எதிர்பாராத விளைவுகள், தவிர்க்க முடியாத உடல், மன பாதிப்புகள்.
மேற்கூறியவற்றில் விடுபடவும், வருமுன் காக்கவும், பாதிப்புக்கு உள்ளாகும் போது சமாளிக்கவும், ஆரோக்கியத்தை நிலைநாட்டவும், வினைப்பயனை அறுத்து பிறப்பின் நோக்கத்தை அடையவும், உணரவேண்டிய புரிந்துகொள்ள வேண்டிய, வழிமுறைகள், நடைமுறைகள் விளக்கப்படும்.