இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் அதை பெரும்பாலானோர்கள் பின்பற்றுவதில்லை. இதனால் பல உயிரிழப்புகள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இருசக்க வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் பறிமுதல் செய்ய பரிந்துரைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலைகளில் நேரும் விபத்துகளின் போது அதிக அளவிலான உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் நிகழ்கிறது என்பதால் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இருசக்கர வாகனங்கள் ஓட்டும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும், ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : High Court has ordered a compulsory helmet wearing from July 1st.