கல்வி உரிமைச் சட்டப்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு தொடக்க நிலை வகுப்புகளில் (எல்கேஜி, 1-ம் வகுப்பு) 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கு ஆகும் செலவை மத்திய,மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு வழங்கிவிடும்.

ஆனால் இந்த வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்று தொடரப்பட்ட ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்த சென்னை உயர்நீதி மன்றம், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 2015-16-ம் கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை www.tnmatricschools.com என்ற இணையதளத்தில் மாவட்ட வாரியாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனியார் பள்ளிகள், அங்கு தொடக்கநிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்கள், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 3,720 தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விவரங்களை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

English Summary : Poor people can now study in schools with government care. For more details click the link given above.