பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானதை தொடர்ந்து மாணவர்களின் அடுத்த இலக்கு பொறியியல் அல்லது மருத்துவ படிப்பில் சேருவதில்தான் அதிகம் உள்ளது. இந்நிலையில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை குறித்து தெரிந்து கொள்வோம்.
மருத்துவ படிப்பிற்கான கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடும் முறை: பிளஸ் 2 தேர்வில் ஒரு மாணவர் உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் 200-க்கு எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக, ஒரு மாணவர் உயிரியலில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198, வேதியியலில் 200-க்கு 198 என மதிப்பெண் எடுத்திருந்தால் அவருடைய கட்-ஆப் மதிப்பெண் பின்வருமாறு கணக்கீடு செய்யப்படும்
உயிரியல் 198/2 100-க்கு 99
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 198/4 50-க்கு 49.5
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆப் மதிப்பெண்: 198.00
இதேபோன்று ஒரு மாணவர் பிளஸ் 2 பாடத் திட்டத்தில் அறிவியல் பிரிவை (சயின்ஸ் குரூப்) தேர்வு செய்து படித்திருந்து அவர் தாவரவியலில் 200-க்கு 200, விலங்கியலில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198, வேதியியலில் 200-க்கு 198 என மதிப்பெண் எடுக்கும் நிலையில் அவருடைய மருத்துவ படிப்பிற்கான கட்-ஆஃப் மதிப்பெண் பின்வருமாறு கணக்கீடு செய்யப்படும்
தாவரவியல் 200/4 50-க்கு 50
விலங்கியல் 198/4 50-க்கு 49.5
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 198/4 50-க்கு 49.5
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 198.50
மேலும் பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு குறித்து இப்போது பார்ப்போம். பிளஸ் 2 தேர்வில் கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் 200-க்கு எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198, வேதியியலில் 200-க்கு 200 என மதிப்பெண் எடுக்கும் நிலையில் பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் பின்வருமாறு கணக்கீடு செய்யப்படும்.
கணிதம் 198/2 100-க்கு 99
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 200/4 50-க்கு 50
பி.இ. படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 198.50
English Summary: How to calculate the cut off marks for B.E and MBBS?