பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனா, கும்கி, கயல் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் டி.இமான், அவர் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை புதுமுகங்களை வைத்தே படங்களை இயக்கி வந்த பிரபுசாலமன் முதல்முறையாக தனுஷ், நடிக்க இருக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ரயிலில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மே 7ம் தேதி பிரபுசாலமன் தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார். பிரபுசாலமனுக்கு தனது பிறந்த நாள் பரிசாக, ஒரு சூப்பர் டியூன் ஒன்றை கம்போஸ் செய்து அவரிடம் டி.இமான் ஒப்படைத்துள்ளார்.

மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ள இந்த டியூனை கேட்டு பிரபு சாலமன் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இதுகுறித்து இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘ தனுஷுடனான , பிரபுசாலமனின் அடுத்த படத்திற்கு அவரது பிறந்தநாளில் கம்போசிங் துவங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹேப்பி பர்த்டே பிரபு சாலமன் சார்’ என டுவீட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இமான்.

 

English Summary: Music Director Iman gives gift to Director Prabhu Solomon’s Birthday.