கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இருவரும் மீண்டும் மோதவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இம்முறை மோதுவது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடித்த மாரி திரைப்படமும், சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இரு படங்களின் தயாரிப்பாளர்களும் வரும் ஜூலை 17ஆம் தேதி தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தை ராதிகா சரத்குமாரும், சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன்’ திரைப்படத்தை லிங்குசாமியும் தயாரித்துள்ளனர்.  ஒரே நாளில் ‘மாரி’, ‘ரஜினி முருகன்’ படங்கள் வெளியாவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 

English Summary: Dhanush “Mari” and Sivakarthikeyan “Rajinimurugan” going to clash on same day.