சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி தகவல்களை உறுதி செய்யும் திட்டம் கடந்த மார்ச் 3ஆம்தேதி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் எண், இமெயில் முகவரி ஆகிய தகவல்களையும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில்  கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதியில் முன்னோடித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள வாக்காளர்களை நேரில் சந்தித்து விபரங்களை பெற்று வரும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ். இணைப்பு கொண்ட ‘‘டாப்லெட்’’கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள்  அனைத்தும்  டேப்ளட்டில் பதிவு செய்யப்பட்டு அந்த இடத்திலேயே சரிபார்க்கப்படும். இந்தப் பணிகளை வாக்காளர்களின் வீடுகளுக்கு வந்து அலுவலர்கள் மேற்கொள்வதால் வாக்காளர்கள் சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் ஆதார் எண் பெறுதல், விரல் ரேகை மற்றும் கருவிழிப்படலம் பதிவு செய்தல், புகைப்படம் எடுத்தல், வாக்காளர்களின் தகவல்களுக்கு உண்டான ஆதார ஆவணங்களை பதிவு செய்தல் ஆகியவற்றை அதே இடத்தில் டேப்ளட்டின் உதவியால் ஒவ்வொரு வாக்காளரின் தகவல்களையும் பதிவேற்றிக்கொள்ளப்படும் என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

 

English Summary: Tablets were given to Gummidipoondi Election commission officers.