டிராய் புதிய விதியின் கீழ் சேனல்களை பயனர்கள் தேர்ந்தெடுக்க மார்ச் 31 வரை கால அவகாசத்தை நீடித்துள்ளது. புதிய நிபந்தனையின் கீழ் அடிப்படை தொகையாக ரூ.130 உடன் ஜிஎஸ்டி சேர்த்து நடைமுறைக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் பல பயனர்களுக்கு சேனல்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
டாடா ஸ்கை: டாடா ஸ்கை பயனர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் டாடா ஸ்கையின் பிரத்தியேக மொபைல் செயலியைப் பயன்படுத்தி சேனல்களை தேர்ந்தெடுத்துக கொள்ளும்படி டாடா ஸ்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா ஸ்கை வலைத்தளம் பயன்படுத்தி எப்படி சேனல்களை தேர்வு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
செயல்முறை:
1. டாடா ஸ்கை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
2. அல்லது இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
சந்தாதாரர் ஐடி
3. சந்தாதாரர் ஐடி அலல்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை என்டர் செய்யுங்கள்.
4. உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓ.தி.பி எண்ணை என்டர் செய்யுங்கள்.
மூன்று சேனல் விருப்பங்கள்
5.இப்போது நீங்கள் தேர்ந்தெடுக்க மூன்று விருப்பங்கள் காட்டப்படும்.
6. பரிந்துரைக்கப்பட்ட சேனல்கள், டாடாஸ்கை சேனல்கள் மற்றும் எல்லா சேனல்களும் என்று விருப்பம் தரப்படும்.
ஆள் சேனல்ஸ்
7. பரிந்துரைக்கப்பட்ட சேனல்கள் மற்றும் டாடாஸ்கை சேனல்கள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேனல் பேக்கள்.
8. உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்ய ஆள் சேனல்ஸ் கிளிக் செய்யுங்கள்.