அரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்: அருகில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து VAO விடம் கையெழுத்து பெறவேண்டும்.
பின்பு அந்த விண்ணப்பத்தை அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சர் காப்பீடு மையத்தை அணுகி ரேசன் கார்டு மற்றும் ஆதார் கார்டு காண்பித்து உறுதிப்படுத்திய பின் 22 இலக்க காப்பீடு எண்ணை தருவார்கள். அந்த எண்ணை வைத்து காப்பீடு திட்டத்தை மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
மூன்று மாதம் கழித்து அருகில் உள்ள இ சேவை மையத்தில் சென்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம்.