கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* தமிழகத்தில் மே 10 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

* முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 9, 10) இரு நாள்களும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* அனைத்து மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கவும், உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

* நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு ஊரங்கு காலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* முழுஊரடங்கு காலத்தில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது.

* அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது.

  * முழு ஊரடங்கு காலத்தில் அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் செயல்படத் தடை

* மே 10 முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு காலத்தில் 2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி

* வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 சதவீதம் பணியாளர்களுடன் அனுமதி.

* முழு ஊரடங்கின் போது, இரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும் சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *