சரஸ்வதி தேவிதான் கல்விக்கும் அனைத்து கலைகளுக்கும் கடவுள் ஆவார். மாணவர்களுக்கு, கலைஞர்களுக்கு, பணி புரிபவர்களுக்கு என அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்குவது சரஸ்வதிதான். சரஸ்வதி தேவிக்கு என்று தனிப்பட்ட கோவில்கள் அவ்வளவாக இல்லை என்றாலும் அவருக்கென்று கொண்டாடப்படுவதுதான் சரஸ்வதி பூஜை.
சரஸ்வதி பூஜை வருடம்தோறும் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த வருட சரஸ்வதி பூஜை இந்த வாரம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சரஸ்வதி பூஜையில் முறையாக நீங்கள் சரஸ்வதியை வழிபட்டால் உங்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும், திறமைகளும் கிடைக்கும். இந்த சரஸ்வதி பூஜையில் நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்க வேண்டுமெனில் எப்படி வழிபட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏன் சரஸ்வதி பூஜை:? இந்த பூமியில் வாழும் அனைவருக்கும் அறிவும், திறமையும்தான் அடிப்படை தேவை. அறிவு, திறமை, செயல்திறன் என அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது சரஸ்வதி தேவிதான். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதியை பக்தியுடன் வழிபடுவது உங்கள் அறிவு, திறமை, புத்திகூர்மை போன்றவற்றை அதிகரிக்க உதவும். குறிப்பாக மாணவர்களுக்கு அவர்களின் படிப்பு திறன் அதிகரிக்கும். சரஸ்வதி பூஜை வழிபாடு உங்கள் சிந்தனையை தெளிவாக்குவதுடன் வாழ்க்கையில் உள்ள குழப்பத்தையும் நீக்கும். இது உங்கள் வாழ்வில் அமைதியை நிலவ செய்வதுடன் வெற்றி வாய்ப்பையும் அதிகரிக்கும்.
சரஸ்வதி பூஜைக்கு தயாராகுதல்: சரஸ்வதி பூஜையன்று அதிகாலையில் எழுந்து தண்ணீரில் துளசி இலைகளை கலந்து குடிக்க வேண்டும். குளிப்பதற்கு முன் வேப்பிலை மற்றும் மஞ்சளை சருமத்தில் தேய்த்து குளிப்பார்கள் இது சருமத்திற்கு நன்மையை விளைவிக்கும். குளித்தபிறகு வெள்ளை அல்லது மஞ்சள் நிற துணிகளை உடுத்தவும். வீடு மற்றும் பூஜையறையை நன்கு சுத்தம் செய்யவும்.வீட்டை போலவே உங்கள் மனதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். பூஜை செய்யும்போது வீட்டை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்
சரஸ்வதி பூஜைக்கு தேவையான பொருட்கள்: சரஸ்வதி கலசம் அல்லது சரஸ்வதி படத்தை வைத்து வழிபடலாம். மேலும் ஒரு மண்பானை, சில மா இலைகள், ஒரு தேங்காய், மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் பூ ஆகியவை தேவை. மேலும் ஒரு வெள்ளைத்துணி, விளக்கு, ஊதுபத்திகள், கற்பூரம், வெற்றிலை, அருகம்புல், பழங்கள் மற்றும் சில புத்தகங்கள் ஆகிய பொருட்களை வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுங்கள்
அலங்காரம்: ஒரு சிறிய மேடையில் வெள்ளைத்துணியை விரிக்க வேண்டும். அதில் சரஸ்வதி சிலை அல்லது படத்தை வைத்து அதன் முன் கலசத்தை வைக்க வேண்டும். சிலையை வடகிழக்கு திசையில் வைத்து வழிபடுவது நல்ல பலனை தரும். மஞ்சள், சந்தனம், மற்றும் குங்குமத்தை கொண்டு சரஸ்வதி தேவியை அலங்கரிக்கவும். பின்னர் மஞ்சளில் ஒரு பிள்ளையார் செய்து அதில் குங்குமம் வைத்து கலசத்திற்கு அருகில் வைக்கவும். விளக்கை ஏற்றி பூஜை பொருட்கள் அனைத்தையும் சரஸ்வதி தேவிக்கு முன்னர் வைத்து பூஜை செய்யவும்.
பிள்ளையார் பூஜை: பிள்ளையாரை வணங்கி பூஜையை தொடங்கவும். பின்வரும் மந்திரத்தை கூறி சந்தனம், மற்றும் பிரசாதத்தை வைத்து விநாயகரை வழிப்படவும். இது உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றியை வழங்கும். சுக்லாம் பரதம் விஷ்ணும் ஷசிவர்ணம் சதுர் புஜம் பிரசன்ன வதனம் தயாட் சர்வ விக்னோப சாந்தயே பிரசாதத்தை பிள்ளையாருக்கு படைத்துவிட்டு சரஸ்வதி பூஜையை தொடங்கவும்
சரஸ்வதி பூஜை: சரஸ்வதி தேவியை பின்வரும் மந்திரத்தை 21 முறை கூறி வழிபடவும். ஓம் ஏங் ஹ்ரீங் ஷ்ரீங் வாக்தேவ்யை சரஸ்வதி நமஹ மற்ற சில சரஸ்வதி பூஜை மந்திரங்களும் உள்ளது. இதனை கூறியும் சரஸ்வதி தேவியை வழிபடலாம்.
ஓம் சரஸ்வதி மாயா த்ரிஷ்டா, வீனா புஸ்டாக் தர்னிம்
ஹன்ஸ் வாகினி சம்யுக்தா மா வித்ய டான் கரோடு மீ
யா வீனா வரதாண்ட மண்டிதாகர யா ஸ்வேத பத்மாசன
சா மாம் பாது சரஸ்வதி பகவதி நிஷியேஷா, ஜெயபாத ஆம் சரஸ்வதி நமஹ
தீபாராதனை: மந்திரங்கள் கூறி முடித்தவுடன் பிரசாதங்களை சரஸ்வதிக்கு படைத்து விட்டு தீபாராதனை காட்டவும். பின்னர் தரையில் விழுந்து சரஸ்வதியின் அருளுக்காக வேண்டவும். பூஜை பொருட்களை இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு அடுத்தநாள் காலையில்தான் எடுக்கவேண்டும்.
சரஸ்வதி பூஜையின் பலன்கள்: தொடர்ந்து சரஸ்வதியை வழிபடுவது உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியை கொண்டுவரும். மாணவர்கள் மற்றும் வேலை செல்பவர்களுக்கு அவர்கள் படிப்பிலும், துறையிலும் வெற்றியும், செயல்திறனும் அதிகரிக்கும். சரஸ்வதி பூஜை உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடங்கல்களையும் நீக்கும், உங்கள் வெற்றிக்கான ஏணிப்படிகளை சரஸ்வதி தேவி வழங்குவார். மேலும் நல்ல மதிப்பெண்கள், உயர் சமூக நிலை, பதவி உயர்வு மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் போன்றவை சரஸ்வதி பூஜையின் மூலம் கிடைக்கும்.