சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது மக்கள் குடிநீருக்கு நம்பியிருப்பது கேன் வாட்டர் மட்டுமே. ஆனால் இந்த கேன் வாட்டரின் தரம் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. எனவே தரமான கேன் தண்ணீரோடு தரமற்ற போலி கேன் வாட்டர் நிறுவனங்களும் முளைக்க தொடங்கிவிட்டன.
பெருவாரியான குடிநீர் கேன்களின் மீது நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி, விலை ஆகியவை குறிப்பிடப்படுவதில்லை. குடிநீர் கேன்கள் அழுக்கு படிந்தும், சரிவர அடைக்கப்படாமலும் உள்ளன. எது தரமான குடிநீர்? எது தரமற்ற குடிநீர்? என்று தெரியாமல் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்ய வேண்டுமானால், இந்திய தர நிர்ணய அமைவனத்திடமிருந்து ஐஎஸ்ஐ தரச்சான்று பெறுவது கட்டாயமாகும். அவ்வாறு சான்று பெற விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு, பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகே உரிமம் அளிக்கப்படும். அந்த உரிமம், ஓராண்டு காலத்துக்கு செல்லுபடியாகும். பின்னர், ஒவ்வொரு ஆண்டும் அந்த நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1,351 நிறுவனங்கள் கேன் குடிநீரை விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ளன.
பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடி நீரைத்தான் முக்கிய நீர் ஆதாரமாக கொண்டுள்ளன. அளவுக்கு அதிகமான காப்பர், இரும்பு, அலுமினியம், குளோரைடு போன்றவற்றால் தரம் பாதிக்கப்பட்ட குடிநீரைப் பருகினால், வாந்தி, உயர்ரத்த அழுத்தம், முடக்குவாதம், இதயம், கிட்னி, எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும், நச்சுப் பொருட்களான கேட்மியம், பாதரசம் போன்றவை குடிநீரில் கலந்திருப்பின் அவை மூளை, நுரையீரல், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஐஎஸ்ஐ முத்திரையுள்ள தரமான குடிநீரைப் பருகுவது நல்லது.
குடிநீர் கேன்களை வாங்கும் போது அவை நன்றாக சீல் செய்யப்பட்டு கசிவின்றி இருக்கிறதா, உற்பத்தி மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தேதி உள்ளதா என்று பார்க்க வேண்டும். காலாவதியான குடிநீர் கேன்களை வாங்கக் கூடாது. அழுக்கு படிந்த நிலையில் உள்ள கேன்களை வாங்காமல் தவிர்க்க வேண்டும்.
குடிநீர் கேன்களுக்கான ஐஎஸ்ஐ குறியீடு IS:14543 என்பதாகும். ஒவ்வொரு குடிநீர் கேனிலும் ஐஎஸ்ஐ முத்திரைக்கு மேல் இது குறிப்பிடப்பட்டிருக்கும். இதுதவிர, ஐ.எஸ்.ஐ முத்திரைக்குக் கீழ் CML-XXXXXXX (7 அல்லது 10 இலக்க லைசென்ஸ் எண்) குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த எண்ணைப் பயன்படுத்தி குடிநீர் நிறுவனம் முறையான உரிமம் பெற்றுள்ளதா என்பதை அறியலாம். நுகர்வோர் வாங்கும் கேன் குடிநீர் தரமானதுதானா என்பதைக் கண்டறிய www.bis.org.in என்ற இணையதளத்தில் Product Certification–> Online Infor mation–> Application/ Licence Relat ed–> Status of license என்பதை கிளிக் செய்து, 7 இலக்க லைசென்ஸ் எண் அல்லது குடிநீர் கேன் நிறுவன பெயரை பதிவிட்டால், அந்தநிறுவனத்தின் முழு முகவரி, உரிமம் காலாவதியாகும் தேதி, தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீங்கள் பயன்படுத்தும் குடிநீர் கேன் நிறுவனங்கள் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடனடியாக 044-22541442, 22542519, 22541216 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ, sro@bis.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெர விக்கலாம். அவ்வாறு புகார் தெர விப்போர் குறித்த ரகசியம் காக்கப படும். புகார் அடிப்பட யில் மேற்கொள்ளப்படும் ஆய்வில், முறையான தரச்சான்று பெறாமல் நிறுவனம் இயங்கி வருவது கண்டறியப்பட்டால் தொடர்ப டையவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதமும், ஓராண்டுவரை சிறை தண்டனையும் வழங்க சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: How to spot fake water cans? Description of Indian Standards Officer