2015இல் மக்கள் வாழ தரமான நகரங்களுக்கான ஆய்வரிக்கையை மெர்செர் நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஹைதராபாத் நகரம் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.
உலக அளவில் ஹைதராபாத்க்கு 138வது இடம் கிடைத்துள்ளது. இந்தியவின் மற்ற நகரங்கள் பின்தங்கியுள்ளது.
புனே 145வது இடமும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களுரு 146வது இடமும், சென்னை 151வது இடமும், வர்த்தக நகரமான மும்பைக்கு 152வது இடமும், இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி 154வது இடமும் கிடைத்துள்ளது.
சென்ற ஆண்டைவிட நமது நகரங்கள் சிறிதளவு முன்னேறியுள்ளன. ஹைதராபாத்தில் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ளது. மேலும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இருப்பதால், சர்வதேச விமானங்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே ஹைதராபாத் நகரம் மக்கள் வாழ சிறந்த நகரமாக அமைந்துள்ளது.
English Summary: Hyderabad is the best city for living in India says Mercer Quality of Living Report 2015.