இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வட அமெரிக்காவின் 13 பெருநகரங்களில் மார்ச் 21 முதல் ஜூன் 14-ம் தேதி வரை தொடர் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.

வட அமெரிக்க இசைப்பயணத்தின் போது இங்குள்ள 13 முக்கிய பெருநகரங்களில் ‘ஏ.ஆர். ரஹ்மான்-ஒரு நெருக்கமான இசைப்பயணம்’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

‘ரோஜா’ தொடங்கி இதுவரை 20 ஆண்டுகளாக இசையமைத்துள்ள சுமார் 100 திரைப்படங்களின் சிறந்த பாடல்கள் மற்றும் தனி இசைக்கோர்வை போன்றவை இந்த நிகழ்ச்சிகளின் போது இசைக்கப்படும் எனவும், இந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பதற்கான டிக்கெட் விற்பனை மார்ச் 6-ம் தேதி தொடங்கும். வி.ஐ.பி. பேக்கேஜ் டிக்கெட் விற்பனை மார்ச் 4 வரையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவில் கடந்த 2010-ம் ஆண்டு இதேபோல் இசை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஏ.ஆர். ரஹ்மான் சுமார் 5 ஆண்டுகளூக்கு பிறகு தற்போது மீண்டும் அங்கு நிகழ்ச்சிகளை நடத்த செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: A.R.Rahman is going to do a concert of “A.R.Rahman – an intimate tour” in North America.