அடுத்த 48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தின் முதுகெலும்பு போல செயல்படும் சர்வர்களில் அடுத்த 48 மணி நேரத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்தகைய இடையூறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஐஎஸ்பி எனப்படும் இணைய இணைப்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள், உரிய முன்னேற்பாடுகளை செய்திருந்தால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இணையத்தின் செயல்பாட்டுக்கு அடிப்படையான டிஎன்எஸ் முறையை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.