சிங்கப்பூர், திருச்சி ஆகிய நகர்களுக்கு இடையே நேரடி விமானச் சேவையை இண்டிகோ விமான நிறுவனம் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது.
அன்றாடம் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு அது சேவை வழங்கும். சிங்கப்பூரிலிருந்து பிற்பகல் 2 மணி அளவில் திருச்சிக்கு இண்டிகோ விமானம் புறப்படும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3.55 மணி அளவில் விமானம் அங்கு சென்றடையும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணி அளவில் திருச்சியிலிருந்து புறப்படும் விமானம், சிங்கப்பூருக்குப் பின்னிரவு 1.45 மணி அளவில் வந்து சேரும்.
மேலும் விவரங்களுக்கு இண்டிகோ இணையத்தளத்தை நாடலாம்.