சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள 2.0 படத்தின் முதல் டீசர் நாளை காலை 9.30 மணிக்கு தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசரை 3டியில் பார்க்க வசதியாக தியேட்டர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளனர்.

நாளை வெளியாகும் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் இடைவேளையிலும் , சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், தஞ்சை, நெல்லை, கோவை என அனைத்து நகரங்களில் உள்ள குறிப்பிட்ட தியேட்டர்களில் இலவசமாக டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு டீசரைப் பார்க்கலாம். 2.0 டீசரைக் காணலாம்.

இந்தியாவின் முதல் 3 டி டீசர் என்ற பெருமையும் மேலும் உலக சினிமா வரலாற்றில் எந்த பெரிய படத்துக்கும் டீசர் வெளியீட்டுக்கு தியேட்டர் லிஸ்ட் வெளியிட்டதில்லை. அந்தப் பெருமை 2.0 படத்துக்குக் கிடைத்துள்ளது.

இந்திய சினிமாவின் மிக அதிக செலவில், ரூ 542 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள 2.0 வரும் நவம்பர் மாதம் 29-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *