ஒரு குறிப்பிட்ட வங்கியில் நாம் வங்கிக் கணக்கை தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் பணத்தை டெபாசிட் செய்யும்போது அந்தந்த வங்கிக்கு மட்டுமே சென்று பணத்தை டெபாசிட் செய்யும் முறை தற்போது வழக்கத்தில் உள்ளது.
எந்த வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைப் போல அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாளும் வகையிலான பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத்தை நாடு முழுவதும் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
மும்பையில் தேனா வங்கியின் இணைய வழி சேவையை நேற்று ஆரம்பித்து வைத்த இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எச்.ஆர்.கான் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஏடிஎம் மையங்களை பொதுவாகப் பயன்படுத்தும் வசதி தற்போது இருப்பதைப் போல, பணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வருமாறு ரிசர்வ் வங்கிக்கு கடந்த சில நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் ரிசர்வ் வங்கி விரைவில் புதிதாக ஒரு தொழில்நுட்ப முயற்சியை அறிமுகப்படுத்த உள்ளது. எந்தவொரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தும்போது அதைக் கொண்டு லாபம் ஈட்டுவது அவசியம். இல்லாவிட்டால், அத்தகைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளபடமாட்டாது. அதேபோல, பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத் திட்டமும் முதலில் லாபம் ஈட்டும் நோக்கத்துடன்தான் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
English Summary : Introducing the new facility as soon as the payment of any banks