சென்னை முகலிவாக்கத்தில் ரோபோக்கள் கொண்டு உணவு பரிமாறும் தொழிட்நுட்ப ரீதியாக இயங்கும் உணவகம் திறக்கப்பட்டு உள்ளது.
இந்தியா எத்தனையோ பெருமைகளை தன்னுள் உள்ளடக்கிய நாடுதான். அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ரோபோட் உணவகம் சென்னை போரூரில் திறக்கப்பட்டுள்ளது. சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. அனைத்து உணவகங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு மனிதர்களே உணவுகளை சப்ளை செய்வார்கள் ஆனால் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இங்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோக்கள் தான் உனவுகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்து கொடுத்து பறிமாருகிறது.
இதுகுறித்து அந்த உணவு விடுதியின் உரிமையாளர் கூறும்போது, சென்னையில் ரோபோ ரெஸ்டாரெண்டின் இரண்டாவது கிளை முகலிவாக்கத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இது மூன்றாவதாக முகலிவாக்கத்தில் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு மொத்தம் 8 ரோபோக்கள் உள்ளது. வரவேற்பு வாடிக்கையாளர்களை வரவேற்க தனி ரோபோ, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய உணவுகளை டேபிள் மீது வைக்கப்பட்டுள்ள டேப் மூலம் ஆர்டர் செய்தால் அது நேரடியாக சமையல் செய்யும் “செப்” க்கு சென்றுவிடும். பின் அந்த உணவை அவர் சமைத்து முடித்து ரோபோவிடம் கொடுத்தால், எந்த வாடிக்கையாளர் அந்த உணவை ஆர்டர் செய்தாரோ அவரது டேபிள் அருகே சென்று சப்ளை செய்யும்.
இதற்காக பிரத்யேகமாக தரையில் ஒரு டிராக் அமைக்கப்பட்டு உள்ளது அதன் மூலம் இந்த ரோபோ செல்லும் ரோபோ செல்லும் போது யாராவது குறுக்கே வந்து விட்டால் மனிதர்களை போல் நின்று விட்டு வழி விடுங்கள் என்று கூறும் முதல்கட்டமாக ஆங்கிலத்தில் பேசும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. பின்னர் தமிழிலும் பேசும்படி மாற்றம் செய்யப்படும் என்கிறார். மனிதர்களை போல் உணவுகளை ரோபோவே பரிமாறுவது வாடிக்கையாளர்களுக்கு உணவையும் தாண்டி சற்று பொழுதுபோக்காகவும் அமைகிறது.