ரயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய பயணிகள் பிரதானமாக IRCTC என்ற செயலியையை பயன்படுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்தி முன் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
இணையதளம் மற்றும் செயலியில் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த முடக்கம் நிகழ்ந்துள்ளது. பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்ய Ask Disha என்ற விருப்பத்தை பயன்படுத்துமாறு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அமேசான்(Amazon), மேக் மை டிரிப்(Make my trip) ஆகிய செயலிகள் மூலமாக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது. தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐஆர்சிடிசி இணையதளம் தெரிவித்துள்ளது.