கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தின் இட்டார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்கனவே சென்னை வழியாக செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து தற்போது மேலும் 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரம் வருமாறு:
1. வண்டி எண் 12688: டேராடூனில் இருந்து மதுரைக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் விரைவு ரயில் வரும் 10-ம் தேதி டேராடூனில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
2. வண்டி எண் 12511: கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் வரும் 10-ம் தேதி கோரக்பூரில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
3. வண்டி எண் 12512: திருவனந்தபுரத்தில் இருந்து கோராக்பூருக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் வரும் 14-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
4. வண்டி எண் 12389: காயாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயில் வரும் 12-ம் தேதி காயாவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
மேலும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் வாரந்திர விரைவு ரயில் (14260) நவம்பர் 1-ம் தேதி முதல் மண்டுவாடியில் இருந்து இயக்கப்படவுள்ளது. இதனால், அதன் எண் 15120 என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த விரைவு ரயில் மண்டுவாடியில் இருந்து இரவு 9.15க்கு புறப்படும். அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில் (14250) வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் மண்டுவாடி வரை இயக்கப்படவுள்ளது. அந்த ரயிலின் எண் 15119 என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும் வண்டி எண் 16527/1652 யஸ்வந்த்பூரிலிருந்து கண்ணூருக்கு இயக்கப்படும் யஸ்வந்த்பூர் விரைவு ரயில்களில் 7-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட 2-ம் வகுப்பு பெட்டி ஒன்று நிரந்தரமாக சேர்க்கப்படவுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary:Ittarci echo train depot fire : 4 Fast trains canceled