governmentகடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் அதாவது வரும் புதன்கிழமை முதல் அவரவர் படித்த பள்ளிகளில் விநியோகிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த மே மாதம் 14ஆம் தேதி முதல் பள்ளிகளின் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த சான்றிதழ் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை செல்லத்தக்கதாகும்.

எனினும் மேல்நிலை பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஜூலை 15ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படவுள்ளது. சான்றிதழ்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தமது மதிப்பெண் சான்றிதழை அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

English Summary:Distribute a original marksheet for a plus2 students