rani-illam--1கமல்ஹாசன் நடித்த சூப்பர் ஹிட் வெற்றிப்படமான ‘பாபநாசம்’ படத்தின் சக்ஸஸ் மீட்டிங் நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘ராணி இல்லம்’ என்ற வீடும் ஒரு கேரக்டராகவே இருந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை. படத்தில் இடம்பெற்ற பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் இந்த வீட்டில் நிகழும்படிதான் இருக்கும். எனவே இந்த படத்தின் வெற்றிக்கு இந்த வீடும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடு, கவுதமி கேரக்டரின் பெயரான ‘ராணி’ பெயரிலேயே ‘ராணி இல்லம்’ என்று அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ‘ராணி இல்லத்தை’ மறக்க விரும்பாத கமல் உள்பட படக்குழுவினர் அனைவரும் ‘ராணி இல்லம்’ போன்ற ஒரு செட் போட்டு அதில் இந்த வெற்றி விழாவை நேற்று கொண்டாடியுள்ளனர். இந்த வெற்றி விழாவுக்கு கமல், கவுதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில், டெல்லி கணேஷ் உள்பட படக்குழுவினர் பலர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி விழாவில் படக்குழுவினர் ‘பாபநாசம்’ படத்தின் ஒருசில காட்சிகளை டிராமா போன்ற நடித்தது இந்த விழாவின் ஒரு ஹைலைட்.

கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1.34 கோடி வசூல் செய்த பாபநாசம் படத்தின் வசூல் உலகம் முழுவதும் பிரமிக்கத்தக்க வகையில் இருப்பதாகவும், விரைவில் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

English Summary:Meet the Queen ‘s residence Papanasam kavutami Success