iskon7116சென்னையில் உள்ள இஸ்கான் என்று கூறப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் ஜனவரி 14ஆம் தேதி ஸ்ரீ ஜகன்நாத ரத யாத்திரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரத யாத்திரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டு சேத்துப்பட்டு குஜலாம்பாள் திருமண மண்டபத்தில் முடிவடையும். ரத யாத்திரை ஆர் கே மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கதீட்ரல் சாலை, என்.எச். சாலை, வில்லேஜ் சாலை வழியாக செல்ல உள்ளது.

இந்த ரத யாத்திரையில், 10 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க இஸ்கான் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் சென்னை பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த யாத்திரையில் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து இஸ்கான் ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளர்கள் என்.டி. ராவ், அமரேந்திர கௌர தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியபோது: சென்னையின் ஸ்ரீ ஜகன்நாதர் ரத யாத்திரை விழாவில் பொதுமக்கள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், 1966-ஆம் ஆண்டு சுவாமி பிரபுபாதரால் நிறுவப்பட்ட இஸ்கான் அமைப்புக்கு நிகழாண்டு பொன் விழா ஆண்டாகும். ரத யாத்திரையில் மதம், மொழி, இன பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ளலாம். பக்தி மார்க்கத்தில் பாமரரும் ஆனந்தத்தை அடையலாம் என்பதை உணர்த்தும் விதமாக ரத யாத்திரை அமையும். நிகழாண்டு பொன்விழா ஆண்டு என்பதால் ஜகன்நாதர், பலராம், கிருஷ்ணர் ஆகியோரின் தேர் பவனியின் போது ஆயிரக்கணக்கானோருக்கு இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது என்றனர்.

English Summary: January 14th ISKCON Rathayatra in Chennai.