ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி இன்று தனது 117வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். உலகின் மிக வயதான பெண்மணி என்ற பெருமையை பெற்ற இவர், கடந்த 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி ஜப்பானின் ஒசாகா நகரில் பிறந்தார்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் மிக வயதான பெண்மணி என்ற சாதனையை கடந்த 2013 ஆம் ஆண்டு பெற்ற இந்த பெண்மணியின் பெயர் மிசாவோ ஒகாவா என்பதாகும்.
பிங்க் நிற உடையணிந்து தனது 117வது பிறந்த நாளை கொண்டாடிய மிசாவோ அவர்களுக்கு ஜப்பான் அரசு சார்பில் வாழ்த்து தெரிவித்து மலர்கொத்து அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1919ஆம் ஆண்டு யூக்கியோ என்பவரை திருமணம் செய்து கொண்ட மிசாவோவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய கணவர் கடந்த 1931ஆம் ஆண்டிலேயே மரணம் அடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: Today, Japan Woman Misavo Okava celebrates her 117th Birthday.