பிரபல சமூக சேவையாளரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் அரசியல் குருவுமான அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கனடாவை சேர்ந்த காகன் விது’ என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விரைவில் தான் இந்தியா வரவுள்ளதாகவும், சமூக சேவகர் என்ற பெயரில் இருக்கும் அன்னா ஹசாராவை கொலை செய்து இன்னொரு கோட்சேவாக மாற இருப்பதாகவும் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இந்த ஸ்டேட்டஸுக்கு மூன்று லைக்குகள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து அன்னா ஹசாராவின் அலுவலக ஊழியர்கள் நேற்று மகாராஷ்டிரா மாநில டிஜிபியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அன்னா ஹசரேவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English Summary: Social Worker Anna Hazare gets Murder Threatening Calls.