மாவீரன், நான் ஈ ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி, தற்போது பிரமாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் ‘பாஹுபாலி’. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வரும் மே மாதம் 15ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். சரித்திர கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தமிழ் வசனங்களை பிரபல பாடலாசிரியர் மகன் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

பாஹுபாலி படத்தின் இரண்டாம் பாகம் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

English Summary: Bahubali release date announced. The Film will be released on May 15th, 2015.