சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமின் முதல் நாளில் 6,064 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்கும் விழா நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியபோது, “இந்த வேலைவாய்ப்பு முகாமில் விப்ரோ நிறுவனம் 1,641 மாணவர்களையும், டாடா கன்சல்டன்சி நிறுவனம் 1,611 பேரையும், காக்னிஜெண்ட் நிறுவனம் 1,506 பேரையும், இன்போசிஸ் நிறுவனம் 1,306 பேரையும் தேர்ந்தெடுத்துள்ளன’ என்று கூறினார்.
மேலும் இந்த விழாவில் விப்ரோ தலைவர் விஸ்வநாதன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பிரபிர் பாக்சி, காக்னிஜெண்ட் நிறுவன மேலாளர் அசோக்,டாடா கன்சல்டன்சி நிறுவன மேலாளர் விக்னேஷ், இன்போசிஸ் தலைவர் தினேஷ்,இணை துணை வேந்தர் டி.பி.கணேசன், இயக்குநர் முத்தமிழ் செல்வன், வேலை வாய்ப்புத் துறை இயக்குநர் கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
English Summary : Offer letters for 6,064 students in SRM University job fair.