தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றிற்கான அறிவிப்பு ஆவின் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தகவல்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பித்துப் பயனடையலாம்
நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : திருநெல்வேலி மற்றும் தர்மபுரி
மொத்த காலிப் பணியிடம் : 17
திருநெல்வேலி : 08
தர்மபுரி : 09
பணி மற்றும் பணியிட விபரம்:-
திருநெல்வேலி :-
இளநிலை நிர்வாகி – 01
ஆய்வக தொழில் நுட்பவியலாளர் – 01
தனிச் செயலாளர் – 01
நீட்டிப்பு அதிகாரி – 04
மேலாளர் – 01
தர்மபுரி :-
தொழில் நுட்பவியலாளர் – 04
இளநிலை நிர்வாகி – 01
நீட்டிப்பு அதிகாரி – 04
கல்வித் தகுதி : பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். முழுத் தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளது.
வயதுவரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.1,19,500 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : http://www.aavinmilk.com என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
திருநெல்வேலி:- The General Manager, The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd Reddiarpatti Road, Perumalpuram Post, Tirunelveli – 627007
தர்மபுரி:- The General Manager, Dharmapuri District Co-operative Milk Producers Union Ltd Kanakamutlu (PO), Krishnagiri – 635002
தேர்வு முறை : கல்வித் தகுதி, அனுபவம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :-
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து திருநெல்வேலிக்கு உட்பட்ட பணியிடத்திற்கு 2018 டிசம்பர் 24ம் தேதிக்குள்ளும், தர்மபுரிக்கு உட்பட்ட பணியிடத்திற்கு டிசம்பர் 31ம் தேதிக்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய
http://www.aavinmilk.com/hrtvl2061218.html
http://www.aavinmilk.com/hrtvl1061218.html
http://www.aavinmilk.com/hrdha071218.html
http://www.aavinmilk.com/hrdha071218.html
ஆகிய லிங்குகளையும், விண்ணப்பப் படிவம் பெற http://www.aavinmilk.com/hrtvlapp3061218.pdf என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.