தமிழ்நாடு காவல்துறையின் கீழ் செயல்பட்டு வரும் SBCID-இல் நிரப்பப்பட உள்ள 37 ஜூனியர் ரிப்போர்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: ஜூனியர் ரிப்போர்டர் (Jinior Reporter)
மொத்த காலியிடங்கள்: 37
மாதம் சம்பளம்: ரூ.36,200 – 1,14,800
வயது: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஆங்கிலச் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் தட்டச்சுச் செய்வதில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துச் சான்றிதழ், அலுவலகம் ஆட்டோமேசன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சுருக்கெழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 90 மதிப்பெண்களுக்குச் சுருக்கெழுத்து தேர்வும், 10 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். சுருக்கெழுத்துத் தேர்வில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், தமிழில் 90 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்களையும் ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்திச் செய்து சுய சான்று செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்துப் பதிவு தபால் மூலம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2nd Floor, Old Coastal Security Group Building, DGP Office Complex, Mylapore, Chennai-4
மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 21.03.2019