நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு “கெளரி” என்கிற புத்தம் புதிய மெகாத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
மரையனூரின் காவல் தெய்வமான மாசாணி அம்மனையும், தெய்வீக குழந்தையான கெளரியையும் மையப்படுத்தி நகரும் இந்த கதையில், தாய் தந்தையை இழந்து தனது சித்தி துர்காவுடன், கெளரி வாழ்ந்து வருகிறாள்.
தனது தாய், தந்தையை கொன்ற அந்த கிராமத்தின் ஜமீன் வம்சத்தை அழிக்க பிறந்திருக்கிறாள் கெளரி.
ஜமீன் குடும்பத்துக்கு தொடர்ந்து பிரச்சனை மேல் பிரச்சனையாக வர, அவர்களின் குடும்ப ஜோதிடர் காலனை சந்திக்க, கெளரியை பழி கொடுத்தால் தான் இவர்களுக்கு விடிவுகாலம் என காலன் சொல்ல, மீண்டும் தனது சொந்த கிராமத்துக்கு குடும்பத்தோடு வருகிறது ஜமீன் குடும்பம்.
அங்கு கெளரியை கொல்லும் முயற்சி தோல்வியில் முடிய, மேலும் கெளரி ஜமீன் குடும்பத்துக்கு இடைஞ்சலாக இருக்க, கெளரிக்கு மிகவும் பிடித்த, சித்தி துர்காவை வைத்து கெளரியை கொல்ல ஜமீன் குடும்பம் முடிவு செய்கிறது.
அதன்படி ஜமீன் வீட்டில் வேலை செய்யும் துர்காவை, ஜமீனின் மகன் அசோக்குக்கு திருமணம் செய்து வைக்க ஜமீன் முடிவு செய்ய, அசோக் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அசோக்கின் அம்மாவுக்ம், சித்திக்கும் இதில் விருப்பமில்லாமல் இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்ய, அசோக் – துர்கா திருமணம் நடைபெறுமா? அப்படி நடக்கும் பட்சத்தில் கெளரி, துர்காவுடன் ஜமீன் குடும்பத்துக்கு செல்வாளா? நடக்கப்போவது என்ன? என்கிற உச்சகட்ட பரபரப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.