ருத்ராவை ஏற்றுக்கொள்ளும் பூமிநாதன்..!
சக்தியை கொல்ல திட்டமிடும் ரத்னம்..!
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”.
சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவினாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சக்தி – சிவாவின் ரகசிய திருமணம், பூமிநாதன் பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்ளும் ருத்ரா உள்ளிட்ட திருப்பங்களுடன் தொடர் விறுவிவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
ரகசிய திருமணத்திற்கு பிறகு சிவா – சக்தியின் திருமண சான்றிதழ் நகலை போலீஸ் சிவமணி சிவா வீட்டிற்கு அனுப்பி வைக்க அது ரத்னம் கையில் சிக்க, சிவாவும், சக்தியும் அந்த ஆதாரத்தை தேடி அலைய, ரத்னத்திற்கு உண்மை தெரிய வருமா? என்கிற எதிர்பார்ப்போடும், பூமிநாதனின் நல்ல குணத்தை புரிந்து கொள்ளும் ருத்ரா, மன்னிப்பு கேட்டு பூமிநாதனை வீட்டிற்கு அழைக்க, ருத்ராவின் அழைப்பை ஏற்று பூமிநாதன் வீட்டிற்கு வர அனிதாவிடம் பூமிநாதனை அவளது தந்தை என ருத்ரா அறிமுகம் செய்து வைக்கிறார்.
பூமிநாதனின் வருகையை விரும்பாத ரத்னம் வெறுப்பில் இருக்க, சக்தியை கூடிய விரைவில் கொல்ல ரத்னம் திட்டமிட்ட, இந்துமதி அதை ஒட்டுக்கேட்க, ரத்னம் மறைக்கும் உண்மையை கண்டுபிடிக்க முயலும் இந்துமதிக்கு கமலா வீட்டில் தடயம் ஏதும் கிடைக்காத நிலையில், கடைசியில் டைரி ஒன்றை எடுத்து வர என தொடர் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.