சென்னை: பலத்த பாதுகாப்புகளை இடையே தமிழகம் முழுக்க காணும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுக்க காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவில் மூன்றாவது நாளான இன்று மிகவும் கொண்டாட்டமான நிகழ்வாகும்.
பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீட்டில் இருந்து கொண்டாடிய மக்கள் வெளியே சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவது காணும் பொங்கலின் போதுதான். காணும் பொங்கலின் போது சில கிராமங்களில் மஞ்சள் தண்ணீர் தெளித்து விளையாடுவது, சில ஊர்களில் திருவிழா போல கொண்டாட்டங்கள் நடப்பது வழக்கம்.
அதேபோல் சுற்றுலாத்தலங்களுக்கும் மக்கள் அதிகம் செல்வது வழக்கம். இதனால் தமிழகம் முழுக்க காணும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. இதனால் மெரினா கடற்கரையில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு பறக்கும் கேமரா, கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவக்குழு, குதிரைப்படை உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க பிறபகுதிகளிலும் இதேபோல போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.