காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக சென்னையின் முக்கிய இடங்களுக்கு 480 சிறப்புப் பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக்கழகம் இயக்க உள்ளது. இதுதொடர்பாக மாநகரப் போக்குவரத்துக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து, அண்ணாசதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, விஜிபி, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட்நகர், பிராட்வே, எம்.ஜி.எம்., முட்டுக்காடு படகு குழாம், கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத் திடல் சுற்றுலாப் பொருள்காட்சி ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *