கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது. சிறுநீரக கற்கள் தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீர் அருந்துவது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும். உடல் எடை உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும்.
உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காய் பதார்த்தங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும். சர்க்கரை வியாதி ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது. கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும்.
இதயம் ஒரு வயதிற்கு மேலே அனைவருக்கும் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்டுகிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.
இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவக்காயில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.