rain81113-01சென்னை மாநகரின் பல பகுதிகளில், நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சென்னை நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சைதாப்பேட்டை, அம்பத்தூர், நங்கநல்லூர், வடபழனி, கிண்டி உள்பட நகரின் பல பகுதிகளில் இரவு 10 மணிக்கு திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, தியாகராயநகர், நந்தனம், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் குளம் போல் தேங்கியது. சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மதிய வேளையில் மீண்டும் வெப்பம் சற்று அதிகரித்தது.

வெப்பச் சலனம் நீடித்து வருவதால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டில் இதுவரை சென்னையில் சராசரியாக 144.7 மி.மீ மழை பெய்துள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் ஓரளவு மழை பெய்து வந்தாலும், ஜூலை மாதத்தில் வெயில் அக்னி நட்சத்திரம் போலவே உச்சத்தை அடைந்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான வெயிலை சென்னை நகரம் கண்டது. ஆனால், ஜூலை இரண்டாவது வாரத்துக்கு மேல் சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஜூன் 1ஆம் தேதி முதல் பதிவான மழை நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் சராசரியாக 163 மி.மீ மழையும் மீனம்பாக்கத்தில் சராசரியாக165 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

English Summary:Last night thunderstrom rain in chennai.3days that lasts more information