licசமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள், மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்கள் ஆகியோர்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக அவர்களின் உயர்கல்வி படிப்பதற்காக எல்ஐசி நிறுவனம் கல்வி உதவித் திட்டத்தை (ஸ்காலர்ஷிப்) அறிவித்துள்ளது.

‛எல்ஐசி கோல்டன் ஜூப்ளி ஸ்காலர்ஷிப்’  என்ற பெயரில் எல்.ஐ.சி நிறுவனம் ஆரம்பித்துள்ள இந்த கல்வி உதவித் திட்டத்தில் சமுதாயத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிய வாய்ப்பை சம்பந்தப்பட்ட மாணவர்கள் பயன்படுத்தி உயர் கல்வியை கற்கலாம் என எல்.ஐ.சி அறிவித்துள்ளது.இளங்கலை பட்டப் படிப்புகள், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற் படிப்புகள், பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) மற்றும் ஐடிஐ படிப்புகளில் சேர இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தான் இந்த உதவி தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உதவித் தொகையைப் பெற தகுதியுள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி உதவி திட்டத்தின் பயனை பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி செப்.23-ம் தேதி. மேலும் இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற விரும்புபவர்கள்  http://www.licindia.in/GJF_scholarship.htm என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

English Summary:LIC Company Sep-3 Deadline to Apply For a Scholarship.