கடந்த மார்ச் 7-ந் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, ‘டேக் கேர் இந்தியா’ நிறுவனம் சார்பாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை அண்ணா நகர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை உயர் அதிகாரி ஷ்கில் அக்தர், ஆச்சி குழுமம் நிறுவனர் பதம்சிங் ஐஸக், சமூக ஆர்வலர் நசிமா மாரிக்கர், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, டெக்கான் கிரானிக்கல் நிர்வாக ஆசிரியர் பகவான் சிங், சென்னை மெட்ரோ மாலை நாளிதழ் நிறுவனர் வசீகரன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகை பத்மஸ்ரீ மனோரமா மற்றும் மருத்துவர் பி.எஸ்.ஸ்ரீமதி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட்டது. நடிகை மனோரமா இல்லத்திற்கு சென்று ‘டேக் கேர் இந்தியா’ நிறுவனர் மொஹமத் இப்ராஹிம் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவ்விருதினை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன. ‘எழுச்சி ஏற்படுத்தும் மகளிர் விருது’ மற்றும் ‘இளைஞர்களின் அடையாளம் விருது’ என்ற தலைப்பில் வழங்கப்பட்டது.
இறுதியில் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி குறும்படமொன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் பிரவீன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியை ‘டேக் கேர் இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் யூசப் தொடங்கி வைத்தார்.
English Summary : Take Care India offers a Lifetime Achievement Award for Manorama.