>கும்கியில் அறிமுகமான விக்ரம் பிரபு அதன்பின்னர் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கேன ஒரு இடத்தை பிடித்து முன்னேறி வருகிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், இளைய திலகம் பிரபுவின் மகன் என்ற பின்னணி இருந்தும், சிறந்த கதைகளை தேர்வு செய்வதால்தான் அவர் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பெண்ணை காதலிக்கும் கதையான ‘வாஹா’ படத்தில் தற்போது நடித்து விக்ரம் பிரபு வருகிறார். இந்த படத்தை குமரவேலன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது விக்ரம் பிரபு, ‘மஞ்சப்பை” பட இயக்குனர் ராகவன் இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் விக்ரம் பிரபு ‘வாஹா’ படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிக்க தொடங்குவார் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாக ராகவன் தரப்பில் இருந்து செய்தி வந்துள்ளது. இளையராஜா இசையமைக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.