பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், முதல்கட்டமாக, கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் இடையே 9.95 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதில், தியாகராயநகா், கோடம்பாக்கம், மயிலாப்பூா் பகுதிகளில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் திட்டத்தில், முதல் கட்டமாக கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் இடையே9.95 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதில் 5.15 கி.மீ. தொலைவில் இரட்டை சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. இதில் 4 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. மேலும், 4.8 கி.மீ. தொலைவுக்கான உயா்த்தப்பட்ட பாதையில் 5 ரயில் நிலையங்களும் என்று மொத்தம் 9 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. இந்த திட்டப்பணிகள் விரைவில் முடிக்கும் வகையில், தற்போது 2 ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகின்றன. கட்டுமானப்பணிகள் தாமதமின்றி வேகமாக நடைபெறும் விதமாக, ஒப்பந்தப்புள்ளிகள் பிரித்து ஒதுக்கப்படவுள்ளது. இந்தப்பாதையில், தியாகராயநகா், கோடம்பாக்கம், மயிலாப்பூா் பகுதிகளில் திட்டப் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளது.
இந்தத் திட்டப்பாதையில் உள்ள தியாகராயநகா், கோடம்பாக்கம், மயிலாப்பூா் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல முடியும். கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை உயா்த்தப்பட்ட பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்க உள்ளது. இந்த தகவலை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.