கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

தமிழின் மகிவும் எதிர்பார்ப்புக்குரிய படமான ஜகமே தந்திரம் படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தங்களது தளத்தில் பிரத்யேகமாக வெளியிடுகிறது. ஜகமே தந்திரம் படம் சுருளி எனும் கேங்க்ஸ்டர் தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் எதை தேர்ந்தெடுக்கிறான் என்பதை சொல்லும் படமாகும்.  இத்திரைப்படத்தை YNot Studios மற்றும் Reliance Entertainemnt நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜகமே தந்திரம் 2021ல் வெளியாகும் மிகப் பெரும் எதிர்பார்ப்புக்குரிய முதல் திரைப்படம் ஆகும். இப்படம் ஒரே நேரத்தில் பல மொழிகளில் 190 நாட்களில் 204 மில்லியன் சந்தாதாரர்களை சென்றடையவுள்ளது.  நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது,  ஜகமே தந்திரம் எனது கனவு திரைப்படம். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். இக்கதை சொல்லப்பட வேண்டிய முக்கியமான கதை. மேலும் உலகில் உள்ள அனைவரையும் சென்றடைய வேண்டிய கதை. அனைத்து ரசிகர்களையும் சென்றடைய இப்படம் ஒரு புது வழியினை கண்டடைந்துள்ளது. ஜகமே தந்திரம்  Netflix தளத்தில் 190 நாட்களில் பிரத்யேகமாக, ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியிடப்படுகிறது. ரசிகர்களுக்கு தந்திரமிக்க உலகத்தை Tricky world(ஜகமே தந்திரம்) இப்படத்தின் மூலம் அளிக்க ஆர்வமாக உள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *