சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோவிலில் வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கல்யாண மகோற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. திருமண வயது வந்த ஆண்கள், பெண்கள் இந்த கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரங்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
தொடர்ந்து 6 வாரங்கள் வர முடியாமல் சிரமப்படுபவர்களுக்காக அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் ஆண்டுதோறும் சிறுவாபுரியில் வள்ளி. முருகனுக்கு கல்யாண மகோற்சவம் என்ற விழாவை நடத்துகின்றனர். இதில் பங்கேற்பவர்கள் அபிஷேகத்தையும், கல்யாணத்தையும் கண்டுகளித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களில் ஆண்களுக்கு வள்ளி மாலையும், பெண்களுக்கு முருகன் மாலையும் வழங்கப்படும். கடந்த முறை கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்று திருமணம் கைகூடியவர்கள் தம்பதியராக செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோவிலுக்கு வரவேண்டும்.
இந்த கோவிலில் அமைந்திருக்கும் வள்ளி முருகனுக்கு வைக்கப்படும் சீர்வரிசையை கோவிலை சுற்றி தம்பதிகள் எடுத்து வந்து தங்கள் திருமணம் சிறப்பாக நடந்ததற்கு நன்றி செலுத்த வேண்டும். மகோற்சவத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் செப்டம்பர் 6ஆம் தேதி காலையில் சிறுவாபுரிக்கு வரவேண்டும். இதற்கு முன்பதிவு ஏதும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
வரும் செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணிக்கு விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், அம்மன் அபிஷேகம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் நடக்கிறது. 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது. 1 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 11 மணிக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கல்யாண விருந்து நடக்கிறது. இந்த கல்யாண மகா உற்சவம் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் 99443 09719 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்ப்ட்டுள்ளது.
English Summary:Maha Wedding Festivel at Siruvapuri Temple on Sep-6.